லண்டனில் பூ வியாபாரி குத்திக் கொலை

லண்டன் இஸ்லிங்டன் எஸ்சக்ஸ் ரோடு பகுதியில் பூக்கடை நடத்தி வருபவர் 55 வயது டோனி. இவர் கடந்த சனிக்கிழமை தனது கடைக்கு அருகிலேயே மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார். இவருக்கு இரண்டு மனைவிகளும், பெய்க் என்ற மகளும் இருக்கின்றனர். தனது 14 வயதிலிருந்தே இந்த இடத்தில் பூக்கடை நடத்திவந்த டோனி, இப்பகுதி மக்களின் அபரிமிதமான அன்பை பெற்றவர். அவரது திடீர் மறைவால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

sixteen + fifteen =