எஸ் ஆர் எம் மாணவ மாணவிகள் பிரம்மாண்ட உலக சாதனை
எஸ் ஆர் எம் மாணவ மாணவிகளை கொண்டு இலட்சக்கணக்கான விதைப் பந்துகளால் பசுமை பாரதம் படைத்த பிரம்மாண்ட உலக சாதனை”
திருச்சி மாவட்டம் இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மற்றும் மைதானத்தில் நான்காயிரம் மாணவ மாணவிகளை சார்பாக லட்சக்கணக்கான விதைகளைக் கொண்டு விதைப் பந்துகளை உருவாக்கி திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குடும்பம் உலக சாதனை படைத்துள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வந்த திருச்சி ஏசி வைத்தியநாதன் மற்றும் ஹலோ எஃப்எம் சகா கலந்துகொண்டு அடர்வன காடு எவ்வாறு உருவாகியது என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் அறிவியல் மாணவ மாணவிகள் உலகம் போற்றும் விதமாக உயர்ந்த இலட்சியத்துடன் மாபெரும் உலக சாதனை படைத்து. இந்த மாபெரும் உலக சாதனையை (ELITE WORLD RECORDS)
ஆம்! காடுகளின் பரப்பளவை அதிகரித்து பசுமைத் தமிழகம் உருவாக்கும் நோக்கத்தில் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களில் பயிலும் நான்காயிரம் மாணவ மாணவிகள் கொண்டு கல்லூரி வளாகத்தில் 2 மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேலான விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்.
இருப்பினும் மாணவர்களைக் கொண்டு மண்ணு உருண்டை விதை உருவாக்கப்பட்ட இந்த விதைகளை பேரூராட்சி நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொது மக்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது
இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களின் தலைவர் R.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முனைவர் .R.ஜெகதீஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்கள். இயக்குனர் முனைவர் திரு N.மால்முருகன் மேற்பார்வையிட, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.