காசி பாலமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
செஞ்சி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் அமைந்துள்ள பாலமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரின் ஈசான மூலையில் சிறுகடம்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் திருக்கோவிலில் அருள்மிகு பாலமுருகனுக்கு நேற்று இரவு சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த மாதங்களில் கார்த்திகை மாதம் ஒன்று…
கார்த்திகை மாதத்தில் வருகின்ற சஷ்டி பெருவிழா வெகு விமர்சையாக தமிழக முழுவதும் முருகன் திருக்கோவில்களின் கொண்டாடப்படுகிறது.
அதன் அடிப்படையில் சிறு கடம்பூர் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் திருக்கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாலமுருகருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சூரசம்ஹாரம் வாரம் என்பதால் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான அலங்காரத்தில் பாலமுருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய ஐந்தாவது நாளான நேற்று காலை 6 மணி முதல் சஷ்டி பாராயணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக பாலமுருகப்பெருமானுக்கு,மூலவர் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு பால், தயிர்,சந்தனம்,இளநீர்,விபூதி போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் பேரிச்சம் பழங்களுடன் பல வகை பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பாலமுருகப்பெருமானுக்கும்,ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு வண்ண வண்ண மலர்களை கொண்டு ராஜா அலங்காரம் செய்யப்பட்டது
தொடர்ந்து ஆச்சாரியார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா…அரோகரா…. என கோசங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்
இதனை தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் வளாகத்தில் தலைவாழை இலையுடன் வடை பாயாசத்துடன் உணவு பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவிலின் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள்,மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.