இந்தியா வெற்றி பெற திருச்சி இளைஞர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு
கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற திருச்சி இளைஞர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு.
13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது . லீக் மற்றும் அரை இறுதி நாக் அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன
இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை இறுதி போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மதியம் நடைபெற இருக்கிறது…
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் ஐந்து வீரர்கள் இனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் நடப்பதால் அகமதாபாத் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி கருமணடபம் அருகே பொன் நகர் காமராஜபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் கிரிக்கெட் ஆர்வலர்கள் பதினைந்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தி இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர், அவர்கள் கையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுடைய பதாகைகளை ஏந்தியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்..
இது மட்டுமல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் எதிர்ப்பார்பில் உள்ளனர்..
குறிப்பாக இந்தியா முழுவதும் இளைஞர் பெண்கள் பலர் முகத்தத்தில் இந்திய தேசிய கொடி வர்ணங்கள் பூசி தங்களது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் , எக்ஸ் தளத்தில் பதிவு செய்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகின்றனா்.