பிரிட்டனில் மேலும் சில தளர்வுகள் அமல்

கரோனா பொதுமுடக்கத்திலிருந்து 2}ஆம் கட்ட தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்த நிலையில் ஏப்ரல் 12}ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அவை நடைமுறைக்கு வந்தன. இதன்மூலம் வனவிலங்கு சரணாலயம், நூலகம் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவதற்கும், கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கும், உடற்பயிற்சிக் கூடங்களில் உடற்பயிற்சி செய்வதற்கும், அழகு நிலையம், செல்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும், சில கட்டுப்பாடுகள் இன்னமும் நீடிக்கத்தான் செய்கின்றன.

பாதுகாப்பாக இருப்போம்:
கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், அனைவரும் முகக் கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம்.
தனியாக ஷாப்பிங்:
கூடுமான வரையில் தனியாக ஷாப்பிங் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பிறரும் எளிதில் ஷாப்பிங் செய்ய இயலும். கரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிலும், நெடுந்தொலைவு செல்லாமல், அருகில் உள்ள வணிக வளாகங்களிலேயே ஷாப்பிங் செய்ய பழகிக் கொள்வது நல்லது.

உள்அரங்க நிகழ்வுகளை தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களாகவோ இணைந்து பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு குடும்பங்கள் இணைந்து பார்வையிட தடை நீடிக்கிறது. அதேபோல், வெளிப்புற நிகழ்வுகளை அதிகபட்சமாக 6 பேர் அல்லது இரண்டு குடும்பத்தினர் பார்வையிடலாம். உடற்பயிற்சிக் கூடங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இணைந்து பயிற்சி மேற்கொள்ளலாம். விளையாட்டு உள்பட உள்அரங்க நிகழ்வுகளில், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் ஈடுபட அனுமதியளிக்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

nine − six =