ரயிலில் கூட்ட நெரிசல் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

ஈஸ்ட் மிட்லேன்ட்ஸ் ரயில்வேக்கு உட்பட்ட ரயில்களில் குறைவான பெட்டிகளே இணைக்கப்பட்டிருப்பதால், பயணிகளுக்கு இடையே 2 மீட்டர் சமூக இடைவெளியை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. இதனால் அவதிக்குள்ளாகும் பயணிகள், இது அடுத்தகட்ட கரோனா பரவலுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கவலை தெரிவிக்கின்றனர். மேலும், சில பிராந்திய வழித்தடங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனிடையே, பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதற்காக ஈஸ்ட் மிட்லேன்ட்ஸ் ரயில்வே வருத்தம் தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

fifteen − 15 =