அமெரிக்காவில் புகைபிடிக்க தடை?

 

அமெரிக்காவில் புதினா சுவைகலந்த சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு உணவு மற்றும் மருந்து பொருள்கள் நிர்வாகம் (எப்.டி.ஏ) வெளியிட்டுள்ளது.

புதினா கலந்த மெந்தால் சிகரெட்டை பயன்படுத்திய கருப்பினத்தவர்களுக்கு உடல்ரீதியாக ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில், இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வர இருக்கிறது. இதை விமர்சித்துள்ள சிலர், மெந்தால் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டால், அது அந்த சிகரெட்டின் மறைமுக விற்பனைக்கு வழிவகுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். மேலும், இந்தத் தடை அமெரிக்காவின் சிகரெட் உற்பத்தியில் மூன்று பங்கின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.
அதேவேளையில், மெந்தால் சிகரெட் மீதான தடை உடனடியாக அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றும், சில மாதங்களோ அல்லது ஆண்டுகளோ ஆகலமா என்றும் கூறப்படுகிறது.

மெந்தால் சிகரெட் பயன்பாட்டால் உடலில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் மீதான ஆய்வு குறித்து எப்.டி.ஏ. கமிஷனர் (பொறுப்பு) ஜெனட் வுட்ஹாக் கூறுகையில், சுவை கலந்த சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பதன் வாயிலாக ஏராளமான உயிர்களை அழிவிலிருந்து காத்து, இதுபோன்ற சிகரெட்டுகளை அதிகம் நாடும் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினர், ஓரினச்சேர்க்கையாளர்கள், கருப்பினத்தவர் ஆகியோருக்கு உடல்ரீதியாக ஏற்படும் தீமைகளை அகற்ற முடியும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

2 × three =