லண்டனில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்

லண்டனின் எலிபேன்ட் மர்றும் காஸ்டில் ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில் நேற்று மதியம் 1.45 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3 வணிக வளாகங்களும், 4 கார்களும், ஒரு டெலிபோன் பாக்சும் எரிந்து சாம்பலாகின. 6 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 10 வாகனங்களில் தீயணைப்பு படையினர் 100 பேர் வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Add your comment

Your email address will not be published.

5 × 5 =