லண்டன் முன்னாள் காவல் ஆணையர் ஸ்டீபன் ஹவுஸ். இவர் கடந்த ஆண்டில் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தபோது, உள்துறை அமைச்சக ஆலோசனை அதிகாரி ஒருவரை பாலின ரீதியில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸ்டீபன் ஹவுஸ் பதவி காலம் முடிந்தது. அவர் ஓய்வு பெற்றார்.
அதேசமயம் அவர் உள்துறை அமைச்சக அதிகாரியை செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவரிடம் விசாரணை நடத்துவதற்கு காவல் துறையில் தனிக் குழு அமைக்கப்பட்ட து. அந்த குழு ஸ்டீபன் ஹவுஸிடம் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GIPHY App Key not set. Please check settings