ஒரே தவணையில் கரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி எது தெரியுமா?

அஸ்ட்ராஜெனிகா அல்லது பைஸர் நிறுவன தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் முதல் தவணையிலேயே கரோனா தொற்றுக்குள்ளாகும் அபாயத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த இரண்டு தடுப்பூசிகளும் நல்ல முறையில் பலனளிப்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அஸ்ட்ராஜெனிகா மற்றும் பைஸர் நிறுவன தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதால், அனைத்து வயதினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையமும் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட அனைவரும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் சுமார் 3,70,000 பேரிடம் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு அதிகாரபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை என்றாலும், பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டுவரும் இந்த தடுப்பூசிகள் கரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் திறம்பட செயலாற்றுவது உறுதியாகியிருக்கிறது. மேலும், இந்த தடுப்பூசிகளை ஒரு முறை செலுத்திக் கொண்டாலே கரோனா தொற்று அபாயத்திலிருந்து 65 சதவீதம் விடுபடலாம் என முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

5 × 1 =