குன்றக்குடி முருகப்பெருமான் திருக்கோவிலில் வெள்ளி கேடயம் திருவீதி உலா
குன்றக்குடி அருள்மிகு ஶ்ரீ சண்முகநாத முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா மூன்றாம் திருநாள் வெள்ளி கேடயம் திருவீதி உலா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதன் முருகப்பெருமான் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு மூன்றாம் திருநாள் உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கேடயத்தில் உற்சவர் விநாயகர் பெருமான் முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ கந்தர் சுவாமி ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்கள்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.