இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும்

 

லண்டன் மேயர் வலியுறுத்தல்

 

இங்கிலாந்தில் ஹேக்னி, போல்டனில் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், லண்டனிலும் ஆங்காங்கே இந்தியவகை கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பாதிக்கப்பட நேரிடுகிறது. எனவே, இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில், சுகாதாரத் துறை முன்னுரிமை அளிக்க வேண்டுமென லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தினார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி;

லண்டனில் இந்தியவகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில், இளைஞர்களுக்கு துரிதமாக தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறை செயலாளர் மாத் ஹான்காக்கும், தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதிம் ஷஹாவியும் விறுவிறுவென கவனம் செலுத்த வேண்டும். நமது நகரில் எந்த பகுதி தீவிர பாதிப்புக்குள்ளானது என்பது நமக்கு தெரியும். அந்த இடங்களில் மட்டும் மிகப்பெரிய முகாம்களை நடத்தி, இளைய சமுதாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதுமட்டுமன்றி, தடுப்பூசிக்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி, கரோனா பரவல் சங்கிலி பிணைப்பை அறுக்க வேண்டும். பொதுமக்களும் அடிக்கடி உடல்நலனை பரிசோதித்து பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்றார் சாதிக்கான்.

Add your comment

Your email address will not be published.

two × five =