சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இங்கிலாந்தின் கார்டிப் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கிவின்டா ஓவென். சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்ட இவர், சனிக்கிழமை சைக்கிளில் சென்றபோது காரில் அந்த வழியாக வந்த ஓட்டுநர், இவரை மறித்து பாலியல் ரீதியாக கமெண்ட் செய்தார். இதனால், வெகுண்டெழுந்த கிவின்டா, அதை செல்போனில் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் உலவவிட்டார். இது வைரலாக பரவி வருகிறது. இதனிடையே, பெண்கள் நடந்து செல்வதை விட பைக்கில் செல்வதுதான் பாதுகாப்பு என்றும், அப்போதுதான் பாலியல் ரீதியான தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் விரைவாக கடந்து செல்ல முடியும் என்றும் கருத்து தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

7 − one =