இங்கிலாந்தில் கரோனாவை கட்டுப்படுத்த கழிவுநீர் பரிசோதனை

 

 

இங்கிலாந்தில் கரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கழிவுநீர் பரிசோதனை துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு மக்களிடம் பரிசோதனை மேற்கொண்டதற்கு நிகரான முடிவை பெறலாம் என்று விஞ்ஞானிகளம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

கரோனா வைரஸின் மரபணு துகள்கள் கழிவுநீரில் கண்டறியப்பட்டதாக பெருந்தொற்று தாக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆகையால், இங்கிலாந்தில் 500க்கும் மேற்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், கழிவுநீர் எடுக்கப்பட்டு, எக்ஸ்டரில் உள்ள அறிவியல் ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் கரோனா பரவலின் ஆரம்ப நிலையிலேயே அதை தடுத்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், கொவிட் 19ஐ கண்டறிவதற்கான கூடுதல் முறை இது. கரோனா தொற்றை திறம்பட எதிர்கொள்ளவும், பொதுமக்களை காக்கவும் இந்த கழிவுநீர் பரிசோதனை உதவுகிறது என்றார்.

இந்த பரிசோதனைக்கு காரணகர்த்தாவான பிரிட்டன் சூழலியல் மற்றும் நீர்வள இயல் துறை பேராசிரியர் ஆண்ட்ரூ சிங்கர் கூறும்போது, கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்திலும், இன்ப்ளூயன்சா உள்ளிட்ட நோய்க்கிருமிகளை கண்டறியும் வகையில், இந்த கழிவுநீர் பரிசோதனை தொடரும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

6 + 17 =