காதல் மனைவியை பிரிந்தார், பில்கேட்ஸ்

 

 

உலகின் 4ஆவது பணக்காரரான பில்கேட்ஸ்} மெலிண்டா கேட்ஸ் தம்பதி தங்களது 27 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர்கள் இருவரும் வெளியிட்ட பதிவில், “”கடந்த 27 ஆண்டுகளாக மூன்று அரும்பெரும் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தோம். சர்வதேச அளவில் அனைத்து மக்களும் ஆரோக்யமான வாழ்வை பெறுவதற்கான அறக்கட்டளையை நிறுவினோம். இந்தப் பணியில் எங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதற்காக இருவரும் இணைந்து பணியாற்றுவோம். ஆனால், வாழ்வின் அடுத்தடுத்த கட்டத்தில், தம்பதியாக எங்களால் இனிமேலும் வாழ முடியும் என்று எங்களால் எண்ண முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் செல்வந்த தம்பதியின் இந்த அறிவிப்பு, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதல்:

பில்கேட்சுக்கு சொந்தமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மெலிண்டா கடந்த 1987இல் வேலைக்கு சேர்ந்தபோது தான் இருவரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது, அந்நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவு மேலாளராக மெலிண்டா பணியில் சேர்ந்தார். நியூயார்க் நகரில் ஒருசமயம் இருவரும் உணவு வேளையின்போது நெருங்கி பழகிய போதுதான் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து, திருமணத்தில் முடிந்தது.

இதை ஒரு பேட்டியன்போது குறிப்பிட்ட பில்கேட்ஸ், “”நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தோம். அப்போது எங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று காதலை முறித்துக் கொள்வது, மற்றொன்று திருமணம் செய்து கொள்வது. இதில், இரண்டாவதை தேர்வு செய்தோம்” என்று கூறியிருந்தார்.

பில்கேட்ஸ்} மெலிண்டா தம்பதி திருமணம் கடந்த 1994இல் லாணாயின் ஹவாய்ன் என்ற தீவில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது, வானில் யாரும் தேவையின்றி பறக்கக் கூடாது என்பதற்காக உள்ளூரில் இருந்த அனைத்து ஹெலிகாப்டர்களையும் அத்தம்பதி வாடகைக்கு பெற்று, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.

 

3 பிள்ளைகளுக்கு பெற்றோரான இந்த தம்பதி, பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை நிறுவி உலகம் முழுவதும் சேவை செய்துவருகின்றனர். தொற்று நோய்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காவும் இந்த தம்பதி பில்லியன் டாலரை செலவிட்டிருக்கின்றனர்.

மேலும், செல்வந்தர்கள் தங்களது சொத்தில் பெரும் பங்கை ஏழைகளுக்கு கொடுத்து உதவும் வகையில், “கிவிங் பிலெட்ஜ்’ என்ற பிரசாரத்தை பில்கேட்ஸ் தம்பதியும், பிரபல முதலீட்டாளர் வாரன் பப்பெட்டும் இணைந்து முன்னெடுத்தனர்.

தற்போது 65 வயதாகும் பில்கேட்ஸ், 124 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 4ஆவது பணக்காரராக திகழ்வதாக போர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செல்வத்துக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி 1970இல் அவரால் ஆரம்பிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்தான். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமாக இது திகழ்கிறது என்றால், அதற்கு பின்னால், அவரது கடின உழைப்பு இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

மகள் உருக்கம்:

பில்கேட்ஸ் தம்பதி பிரிவு குறித்து அவர்களது 25 வயது மகள் ஜெனிபர் கேட்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், “”இது எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சோதனையான காலம். எனது செயலுக்கும், உணர்வுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என இன்னமும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்”” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Add your comment

Your email address will not be published.

ten − three =