திண்டிவனத்தில் 4 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கடப்பாரையை எடுத்து சிறிது நேரம் பள்ளம் நோண்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்
திண்டிவனம் நேரு வீதியில் இயங்கி வந்த வட்டாட்சியர் அலுவலகம் பழுதடைந்துள்ள நிலையில் அவற்றை இடித்து விட்டு புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா 4 கோடியே 71 லட்சத்து 46,371 ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது .இதில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் ஆகியவை அடங்கிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்துக் கொண்டனர்.முன்னதாக அதேபோல திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் 12 லட்சம் மதிப்பிலான குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.கடப்பாரையை எடுத்து சிறிது நேரம் பள்ளம் நோண்டினர் .