விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய செஞ்சி பேரூராட்சி தலைவர்
செஞ்சியில் அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து. மாநில அளவில் கலந்து கொள்வதற்காக தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் பொருட்களை செஞ்சி பேரூராட்சி தலைவர் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள கால்பந்து போட்டியில் மாநில அளவில் கலந்து கொள்வதற்கு செல்லும் மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்மஸ்தான் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் திருச்சியில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றால் இலவசமாக எனது சொந்த செலவில் வெற்றி பெற்ற மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்வதாக பேரூராட்சி தலைவர் உறுதி அளித்தார்.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று திருச்சியில் மாநில அளவில் நடைபெற இருக்கும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் வெற்றி பெற்றால் சுற்றுலா அழைத்துச் செல்வதாக பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் கூறிய வார்த்தைகள் அரசு பள்ளி மாணவிகளிடையே முயற்சியும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.