கல்வித்துறை முன்பு பகோடா சுட்டு விற்கும் நூதன போராட்டம்
புதுச்சேரி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வில் வயது வரம்பு தளர்வு கோரி கல்வித்துறை முன்பு பகோடா சுட்டு விற்கும் நூதன போராட்டம்.
புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் வயது வரம்பு தளர்வு கோரி இயற்கை மற்றும் கலாச்சாரப் புரட்சி இயக்கம், சிந்தனையாளர் பேரவை மற்றும் சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்..
கல்வித்துறை முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விறகு அடுப்பு மூட்டி வாணல் வைத்து எண்ணெயில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு கொடுத்து நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
ஆசிரியர் நியமனத்தை அரசு காலங்கடத்தியதால் பலருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. அதனால் வயது வரம்பை தளர்த்தகோரியும் அரசுக்கு கோரிக்கை வைத்து இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த நூதனப் போராட்டத்தை சமூக அமைப்பில் நடத்தினார்கள்…
இந்தப் போராட்டத்தில் இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்ஸ்சுவா, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழர் களம் அழகர், சிந்தனையாளர் பேரவை செல்வம் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்…