அதிகரிக்கும் இந்திய வகை கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசியை துரிதப்படுத்த பிரிட்டன் முடிவு

 

பிரிட்டனில் இந்திய வகை கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துரிதப்படுத்தவும், உள்ளூர் அளவில் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு அதிகளவில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நதீம் ஷஹாவி தெரிவித்தார். மேலும், உருமாறிய இந்திய கரோனா தொற்று காரணமாக ஜூன் 21இல் மேற்கொண்டு பொதுமுடக்கத்தில் தளர்வுகளை கொண்டுவந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனில் மே 5 ஆம் தேதி வரை 520 ஆக இருந்த இந்திய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது இரு மடங்கு அதிகரித்து 1,313 என்ற இரட்டை இலக்கத்தை தொட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

six + 5 =