ஸ்காட்லாந்து முதலமைச்சராக நிக்கோலா ஸ்டார்ஜியன் பதவி வகிக்கிறார். அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாக சமீபத்தில் அறிவித்தார். எனவே அடுத்த முதலமைச்சர் பதவியேற்கும் வரை இடைக்கால முதலமைச்சராக தொடருமாறு ஸ்காட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டார்ஜனிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஸ்காட்லாந்து முதல்வரின் வீடு எடின் பரோ சார்லோட்டி ஸ்கொயரில் அமைந்துள்ளது. அரண்மனை போல காணப்படும் இந்த வீட்டில், அடுத்த மாதம் 17ஆம் தேதி பராமரிப்பு பணி தொடங்குகிறது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் கழித்து செப்டம்பர் ஒன்றாம் தேதி தான் பராமரிப்பு பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஸ்காட்லாந்து கேபினட் கூட்டத்தை செயின்ட் ஆண்ட்ரூ ஹவுஸில் நடத்த முதலமைச்சர் முடிவு செய்து இருக்கிறார். ஒருவேளை இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்காட்லாந்துக்கு புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்டால் எடின்பரோவில் உள்ள மாற்று பங்களாவில் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
GIPHY App Key not set. Please check settings