பிரிட்டனில் வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்

 

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட 4 நாடுகளிலும் கடந்த சில நாள்களாக கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றனர். கடலில் உற்சாகமாக டைவ் அடித்து ஆனந்த குளியலிடுகின்றனர். திங்கள்கிழமை இந்த ஆண்டின் அதிகபட்சமாக லண்டனின் ஹீத்ரோ பகுதியில் 31.6 டிகிரி செல்சியஷ் வெப்பநிலை பதிவானது. இதே நிலை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

12 + 11 =