இங்கிலாந்தில் ஆசிரியர்களின் போராட்டத்தால் 50% பள்ளிகள் மூடப்பட்டன. நேஷனல் எஜுகேஷன் யூனியனை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த மார்ச் 15, 16 ஆம் தேதிகளில் ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மார்ச் 15ஆம் தேதி பயிற்சி மருத்துவர்கள், குடிமை பணி அதிகாரிகள், ரயில் ஓட்டுநர்கள், சில பிபிசி ஊழியர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரிட்டனில் 50 சதவீத பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
GIPHY App Key not set. Please check settings