லண்டனில் 14 வயது சிறுவன் குத்திக் கொலை

 

லண்டனில் 14 வயது பள்ளி சிறுவனை சாமுராய் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியவர்களை காவல் துறை தேடி வருகிறது.

கிழக்கு லண்டன் நியூஹாம் கானிங் டவுன் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பரேஸ் மாடோவ் என்கிற பள்ளி மாணவர், பீஸô ரெஸ்டாரண்ட அருகே கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்த போலீஸôர், சிறுவனை மீட்டு ஏர் ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும், அடுத்த அரை மணிநேரத்திலேயே சிறுவனின் உயிர்பிரிந்தது. சம்பவ இடத்தில் போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரேஸ் மாடோவ் வைத்திருந்த எல்க்ட்ரானிக் ஸ்கூட்டருக்கு ஆசைப்பட்டு அவரை ஒரு கும்பல் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லண்டன் மேயர் சாதிக் கான் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. லண்டன் மெட்ரோபாலிடன் துணை ஆணையருடன் தொடர்பில் இருக்கிறேன். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால், அமைதி காக்காதீர். காவல் துறைக்கு 101 என்ற எண்ணின் வாயிலாக தகவல் அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

2 × 2 =