சாண்டன்டர் வங்கி சேவை பாதிப்பு

 

பெட்ரோல் கூட வாங்க இயலாமல் வாடிக்கையாளர்கள் அவதி

 

பிரிட்டனில் சாண்டன்டர் வங்கி சேவையில் சனிக்கிழமை திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பெட்ரோல் கூட வாங்க வழியின்றி அதன் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாக நேர்ந்தது.

சான்டன்டர் வங்கியில் 1 கோடியே 40 லட்சம் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்த வங்கி சேவை அனைத்தும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சனிக்கிழமை காலை முடங்கியதால், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் எந்தவித பர்சேஸýம் மேற்கொள்ள இயலவில்லை. மேலும், பெட்ரோல் பங்கில் நீண்டநேரம் காத்திருந்து பெட்ரோல் போட்டவர்களும், அதற்கான தொகையை ùசெல்போன் ஆப் வாயிலாக செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதுபோன்ற பல்வேறு சேவைகளை பெற முடியாமல், சான்டன்டர் வாடிக்கையாளர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.

இதனிடையே, வாடிக்கையாளர் சேவைக் குறைபாட்டுக்காக வருத்தம் தெரிவித்த அந்த வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்களின் நலன் கருதி அதன் சில கிளைகளை மட்டும் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 12 மணிவரை திறந்துவைத்திருந்தது. இந்நிலையில், இரவு 9.15 மணிக்குப் பின்னரே வங்கி சேவை சீரானது. அதன்பின்னர்தான் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Add your comment

Your email address will not be published.

one + nineteen =