அமெரிக்காவில் பரவுகிறது அடுத்த தொற்று

 

கோழிகளை தொடக் கூடாது என எச்சரிக்கை

 

அமெரிக்காவில் சல்மோனெல்லா என்ற பெயரில் அடுத்த வகை தொற்று பரவுவதால், கோழிகளை தொடக் கூடாது என நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

 

அமெரிக்காவில் இதுவரை 43 மாகாணங்களில் 163 பேருக்கு சல்மோனெல்லா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொல்லைப்புற கோழிகளின் வாயிலாக இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே, கோழிகளை தொடவோ, முத்தமிடவோ, அணைக்கவோ கூடாது என்றும், இதன்மூலம் பொதுமக்களின் வாயில் கிருமி பரவி, நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், கோழி, வாத்துகள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் தெரிந்தாலும் அவை சல்மோனெல்லா கிருமியை சுமந்துவந்து பரப்பும் தன்மைவாய்ந்தவை என்றும் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தொற்றின் வாயிலாக காய்ச்சல், டயரியா, வயிற்று வலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிகிச்சை பெறாமலேயே பெரும்பாலானோர் குணமடைந்துவிடுகின்றனர். ஆனாலும், தீவிர பாதிப்புகள் மரணத்தை விளைவிக்கும் எனவும் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, இந்தத் தொற்று பாதித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

கோழிப்பண்ணைக்கு சென்றுவந்தால் உடனடியாக கைகளை கழுவிவிட வேண்டும். குழந்தைகளை கோழிகளுக்கு அருகே செல்ல விடக் கூடாது. இவற்றை முறையாக கடைப்பிடித்தால் இந்தத் தொற்றை வென்றுவிடலாம் என நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆலோசனை தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

thirteen + fifteen =