இரட்டிப்பானது அரியவகை மான்களின் எண்ணிக்கை

கஜகஸ்தானில் அதிகளவில் காணப்பட்ட சைகா என்ற அரிய வகை மான் இனம் கடந்த 2015ஆம் ஆண்டில் கொத்து கொத்தாக மாண்டன.

இதனால், இந்த இனம் அடியோடு அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. அன்றைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் இது விவாதப் பொருளாகவும் மாறியது.(தலைப்புச் செய்திகளிலும் இடம் பிடித்தது)

இந்த நிலையில், தற்போது கஜகஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி ஆய்வில், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை சைகா மான் இனம் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக 2019இல் 3,34000 ஆக இருந்த சைகா மான்கள், ஈராண்டு இடைவெளியில் 8,42,000 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

four × five =