பிரிட்டன் சிபிஐ எனப்படும் தொழில் கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்தவர் டோனி டேங்கர். இவர் தன்னுடன் பணியாற்றிய பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தொடர்ச்சியாக அவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதனால் உடனடியாக டோனி டேங்கரை பதவியில் இருந்து பிரிட்டன் அரசு நீக்கியது. அவருக்கு பதிலாக ரெய்ன் நியூட்டன் ஸ்வித் என்பவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் டோனி டேங்கர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் புகாரால் சமுதாயத்தில் தனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் முற்றிலும் தகர்ந்து போய் விட்டதாக டோனி கவலை தெரிவித்தார். மேலும் தனது செயல்பாட்டுக்காக அவர் மன்னிப்பும் கோரினார்.
GIPHY App Key not set. Please check settings