மாடலிங் காதலியுடன் பொழுதை கழிக்கும் ரியான் கிக்ஸ்

வேல்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் ரியான் கிக்ஸ் (47), தனது முன்னாள் காதலி உள்பட 2 பெண்களை அச்சுறுத்தி தாக்கிய குற்றச்சாட்டின்கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார். இந்தத் தண்டனை விவரம் வரும் புதன்கிழமை மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், சேஷிர் ஹாலோ பகுதியில் அவர் தனது இந்நாள் காதலியும், பிரபல மாடலிங் அழகியுமான 33 வயது சாரா சார்லஸ் என்பவருடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், செல்லபிராணியான நாயை, ரியான் அழைத்துச் செல்வது பதிவாகியிருக்கிறது.

ரியான் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், அவருக்கு சாரா கடந்த சில மாதங்களாக மிகவும் ஆறுதல் அளிப்பதாகவும், அவருடன் ரியான் திறந்த மனதுடன் பழகி வருவதாகவும், இருவருக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, ரியான் தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றுச் சென்ற முதல் மனைவி ஸ்டேசியை சந்தித்து, வழக்கிலிருந்து விடுபட தனக்கு உதவுமாறு கோரியதும் தெரியவந்துள்ளது. 2 குழந்தைகளுக்கு பெற்றோரான ரியான், ஸ்டேசி தம்பதி கடந்த 2016இல் விவாகரத்து பெற்றனர். தற்போது, 41 வயதாகும் ஸ்டேசி, பிரபல பின்னணி பாடகரான 32 வயது மாக்ஸ் ஜார்ஜுடன் நட்பில் இருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

thirteen − four =