திருச்சியில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம்
ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டில் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விஜயதசமி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 55 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றுவருகிறது.
திருச்சியில் உறையூர் நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் இருந்து இன்று மாலை ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது, தெப்பக்குளம், சத்திரம் பேருந்து நிலையம், கரூர் பைபாஸ் ரோடு வழியாக அண்ணாமலை நகர் சாலையில் நிறைவடைந்தது.
இந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சென்றனர், மேலும் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.