புதிய வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் கட்டணம்

டபுள் இ நிறுவனம் அறிவிப்பு

பிரிட்டனின் பிரதான செல்போன் நிறுவனமான டபுள் இ, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தங்கள் நிறுவன சேவையை பயன்படுத்தும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதியிலிருந்து டபுள் இ நிறுவன சேவையை பெறும் அல்லது அப்கிரேட் செய்யும் வாடிக்கையாளர்கள், நாளொன்றுக்கு அந்நிறுவனத்தின் சலுகையை பெற கூடுதலாக 2 பவுண்ட் செலுத்த வேண்டும். இது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஐரோப்பாவில் 47 பகுதிகளில் நடைமுறைக்கு வருகிறது.

பி.டி. குழுமத்தின் ஓர் அங்கமான டபிள் இ நிறுவனம், ஐரோப்பாவில் ரோமிங் கட்டணத்தை அறிமுகப்படுத்த திட்டமிடவில்லை என சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதன் நிலைப்பாட்டில் இருந்து விலகி, தற்போது கட்டணம் விதிக்க தொடங்கியிருப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Add your comment

Your email address will not be published.

2 + fifteen =