வொர்க் ஃபிரம் ஹோமுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

பிரதமருக்கு தொழில் அதிபர்கள் கடிதம்

இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதி கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகின்றன. அன்றைய தினம் முதல் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வொர்க் ஃபிரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வந்து வேலைபார்க்கும் வகையில், வழிமுறைகளை வகுக்கக் கோரி, 50 தொழில் அதிபர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் அனுப்பினர். அதில், ஹீத்ரு மற்றும் காட்விக் விமான நிலைய சி.இ.ஓ.க்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

சிட்டி சென்டர்களை திறந்தால்தான் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

13 − 3 =