பிரிட்டனில் இருந்து திரும்புபவர்களுக்கு அயர்லாந்தில் கட்டுப்பாடு

பிரிட்டனில் டெல்டா தொற்று பரவல் காரணமாக லாக் டவுன் மேலும் 4 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. டெல்டா தொற்றின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரிட்டனிலிருந்து அயர்லாந்து திரும்புபவர்கள், ஏற்கெனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும், அவர்கள் தங்களை 5 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அயர்லாந்து அமைச்சரவை அறித்துள்ளது. இதேபோல், தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாத நபர்கள், பிரிட்டனிலிருந்து அயர்லாந்து திரும்பினால் 10 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறிய அயர்லாந்து அமைச்சரவை, இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தியது.

Add your comment

Your email address will not be published.

two − 1 =