பிரிட்டன் பயணிகளுக்கு மால்டா, ஸ்பெயின் கட்டுப்பாடு

பிரிட்டனில் இருந்து போர்ச்சுகல், மால்டா நாடுகளுக்கு செல்பவர்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. போர்ச்சுகல் செல்லும் பிரிட்டன் பயணிகள், பயணம் செய்வதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காட்ட வேண்டும். இல்லையெனில், 14 நாள்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

மால்டா நாட்டில் புதன்கிழமை முதல் இருதவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரிட்டன் பயணிகள், கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுவர். ஸ்பெயினை பொறுத்தமட்டில், பிரிட்டன் பயணிகள் இருடோஸ் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கோவிட் நெகடிவ் சான்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

sixteen − 10 =