ஜப்பான் நிலச்சரிவில் வயதான தம்பதி மீட்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அடாமி நகரில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது .இதில் ஒரு கிராமமே புதையுண்டது.

மீட்பு பணி இரவு- பகலாக தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் எய்ஜி என்ற 75 வயது முதியவரும், யோஷி யுஹாரா என்ற அவரது மனைவியும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்து 26 மணிநேரம் கழித்து இவர்கள் மீட்கப்பட்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதுவரை 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

five × three =