ஏரியில் 2 வயது சிறுவன் மீட்பு

 

இங்கிலாந்தின் ஹாம்ப்ஷிர் பகுதியில் உள்ள ஸ்வான்விக் ஏரியில் இருந்து 2 வயது ஆண் குழந்தை சலனமற்ற முறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணிக்கு உள்ளூர் காவல் துறையினரால் மீட்கப்பட்டது. சிறுவனின் இந்த நிலைக்கு காரணமானதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிறுவன் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

13 − 1 =