குழந்தைகளின் நலன் காக்க இன்ஸ்டாகிராமை கைவிடுக

முகநூல் சிஇஓ-வுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் நலன் காக்க இன்ஸ்டாகிராமின் அடுத்த வெர்ஷனை கைவிடக் கோரி, முகநூல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க்குக்கு அமெரிக்க அதிகாரிகள் கடிதம் வாயிலாக வேண்டுகேள் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் 44 மாகாண மற்றும் பிரதேசங்களை சேர்ந்த அட்டார்னி ஜெனரல்கள் கையெழுத்திட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:சமூக வலைதள பயன்பாடுகள் குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்றன. பிள்ளைகள் எப்போதும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களால் நடைமுறை சவால்களை எதிர்கொள்ள முடிவதில்லை. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளம் குழந்தைகளுக்கு பல்வேறு தீங்குகளை இழைக்கிறது. பிள்ளைகளின் நலன்காக்க அட்டார்னி ஜெனரல்கள் விரும்புகிறோம். ஆனால் பிள்ளைகளின் நலனுக்கு எதிரான கருத்துகளை அவர்களே பகிர முகநூல் ஊக்குவிக்கிறது. இது எங்களது விருப்பத்தை சிதைக்கும் செயல். இளைய சமுதாயம் சமூக வலைதளத்திலேயே மூழ்கி கிடப்பதால், மன விரக்திக்கு ஆளாகி, தற்கொலைக்கு தூண்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தரங்க உரிமைகள் பற்றிய போதுமான அறிவு குழந்தைகளுக்கு இருப்பதில்லை. எனவே, எந்த வகையான கருத்துகளை பகிர வேண்டும் என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. கடந்த 2019ஆம் ஆண்டில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட பேஸ்புக் மெஸஞ்சர் கிட்ஸ் ஆப்பில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்தன. இதனால், குழந்தைகள் கட்டுப்பாடுகளை மீறி, முன்பின் தெரியாத 3ஆம் நபர்களுடன் சேட்டிங் செய்து பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. இதுபோன்ற முன்உதாரணங்களைக் கருத்தில் கொண்டு, இன்ஸ்டாகிராமில் குழந்தைகளுக்கான வெர்ஷனை கைவிட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

11 + 9 =