சூப்பர் மார்க்கெட்டில் மாஸ்க் அணிய மறுத்து வாக்குவாதம்

 

டாக்டர் மீது வழக்கு

 

கர்நாடக மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் மாஸ்க் அணிய மறுத்து, ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மங்களூரு காட்ரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். டாக்டரான இவர், கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருள்கள் வாங்க சென்றார். இறுதியாக, பில் செலுத்துமிடத்துக்கு வந்தபோது அவரை மாஸ்க் அணியுமாறு சூப்பர் மார்க்கெட் ஊழியர் கேட்டுக் கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீநிவாஸ், தான் ஒரு டாக்டர் என்றும், ஏற்கெனவே கரோனா தொற்றுக்குள்ளாகி, அதிலிருந்து மீண்டு அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், முட்டாள்தனமான விதிமுறைகளுக்கு எல்லாம் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி, தகராறில் ஈடுபட்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, டாக்டர் ஸ்ரீநிவாஸ் மீது சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ரியான் ரோசரியோ உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கே மாஸ்க் அணியாமல்தான் சிகிச்சை அளிப்பதாக ஸ்ரீநிவாஸ் வாக்குவாதத்தின்போது கூறியதாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

18 − 2 =