அழிந்துவரும் பவளப்பாறைகள்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில் காணப்படும் அரியவகை பெருந்தடுப்பு பவளப்பாறைகள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை காரணமாக சேதமடைந்து வருகின்றன. எனவே இந்த பவளப்பாறைகளை உலக பாரம்பரிய நினைவு சின்னத்தில் இணைத்து, இதை அழிந்துவரும் அரியவகை பொருள்களின் பட்டியலில் இணைக்க வேண்டுமென யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியது. மேலும், பருவநிலை மாற்ற பிரச்சினையை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு யுனெஸ்கோ அறிவுறுத்தியது. அதேசமயம், பவளப்பாறைகளை அழிந்துவரும் பொருள்களின் பட்டியலில் சேர்ப்பதற்கு ஆஸ்திரேலிய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

14 − three =