தடுப்பூசியால் தலைவலி ஏற்படுவது ஏன்?

 

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் தலைவலியும், ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் புண் ஏற்படுவதும் பொதுவான பக்க விளைவுகளே என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
அரிதாக, நான்கில் ஒருவருக்கு மட்டுமே காய்ச்சல், தலைவலி, குமட்டல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதுவும் சராசரியாக ஒரு நாள் மட்டுமே நீடிக்கும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கரோனா தடுப்பூசிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை கடந்த ஆண்டு இறுதியைக் காட்டிலும் தற்போது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இது மட்டுமன்றி, தடுப்பூசிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும், பயனுள்ள முறையில் இருப்பதாகவும் 80 சதவீதத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதே வீதம் கடந்த ஆண்டில் 70 சதவீதமாக இருந்தது.

பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேருக்கு ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி, மென்மையான உணர்வு, சிவப்புப்படுதல், வீக்கம் ஆகியனவும், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சுமார் 60 சதவீதம் பேருக்கு இதே பக்கவிளைவுகள் ஏற்படுவதும் தெரியவந்திருக்கிறது.
அதிலும், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் 34 சதவீதம் பேருக்கு தலைவலி, உடல்சோர்வு, குளிர் போன்ற எதிர்வினைகள் ஏற்படுகின்றன. அதேசமயம், இதே அறிகுறிகள் பைஸர் தடுப்பூசியை முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில் 14 சதவீதத்தினருக்கும், இரண்டாம் தவணை செலுத்திக் கொண்டவர்களில் 22 சதவீதம் பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் அனைத்திலும் பொதுவான பக்கவிளைவுகள் எதுவென்றால், அது தலைவலிதான் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

7 + fifteen =