வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் மேயர் பதவியை தக்கவைத்துக் கொண்டது கன்சர்வேடிவ் கட்சி

 

 

கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ஆன்டி ஸ்ட்ரீட், வெஸ்ட் மிட்லேன்ட் மேயர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

பிரபல ஜான் லீவிஸ் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநரான அவர், வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் மேயர் தேர்தலில் 3,14,669 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொழிலாளர் கட்சியின் லியாம் பியர்னி 2,67,626 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

பர்மிங்ஹாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய ஆன்டி ஸ்ட்ரீட், தன் மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கும், பிரசாரத்தின்போது உதவிய கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Add your comment

Your email address will not be published.

13 − five =