அதிவேக ரயில் சேவை அடுத்த வாரமும் முடங்கும்

 

 

இங்கிலாந்தில் அதிவேக ரயில்களில் விரிசல் கண்டறியப்பட்டதால், லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை அடுத்த வாரமும் நீடிக்கும் என ரயில் தொழிற்சாலை குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் குழுமத்தை சேர்ந்த ராபர்ட் நிஸ்பெத் என்பவர் கூறுகையில், 183 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வு ஞாயிற்றுக்கிழமை (மே 16) முடிவடையும். ஆகையால், ரயில் சேவை அடுத்த வாரமும் தடைபடலாம் என்றார்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ரயில் நிறுவனங்கள் பொதுமக்களை அறிவுறுத்தின. கிரேட் மேற்கத்திய ரயில்வே மற்றும் லண்டன் வடகிழக்கு ரயில்வே ஆகியன சார்பில் இயக்கப்படும் ஹிட்டாச்சி 800 ரக அதிவேக ரயில்கள் கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.

விரிசல் காரணமாக ஹல் ரயில் மற்றும் டிரான்ஸ்பென்னி ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட ஹிட்டாச்சி நிறுவனம், இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

one × three =