கடற்கரையில் சமூக இடைவெளியின்றி நூற்றுக்கணக்கானோர் கூடியதில் தவறில்லை

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் கருத்து

ஜி7 மாநாட்டின் ஓர் அங்கமாக கார்ன்வால் கர்பிஸ் பே கடற்கரையில், ஜோபிடன், ஏஞ்சலா மெர்கல், போரிஸ் ஜான்சன், ஜஸ்டின் ட்ரூடோ, இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. அவர்களை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கடற்கரையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூடினர். இது விவாத பொருளாகியது. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராபிடம் செய்தியாளர்களிடம் கேட்டபோது, அது காற்றோட்டம் நிறைந்த வெளிப்புற பகுதிதான். ஆகையால், அங்கு சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதில் தவறு இல்லை என்றார்.

Add your comment

Your email address will not be published.

four × 4 =