பெண் உதவியாளருக்கு முத்தம் கொடுத்த அமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள்

சொந்த கட்சி எம்.பி.யே கண்டனம்

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக் தனது அலுவலகத்தில் பணிபுரியும் கீனா என்ற பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின. கோவிட் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருவரும் எப்படி நெருக்கமாக இருக்கலாம் என கேள்வி எழுப்பிய தொழிலாளர் கட்சி, மேத்யூ ஹான்காக்கை பதவிநீக்கம் செய்ய கோரி போர்க்கொடி உயர்த்தியது. இதற்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். அதை பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், அமைச்சரை பதவிநீக்கம் செய்ய கோரி, அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி. டங்கன் பேக்கர் குரல் எழுப்பியிருப்பியது பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

15 − ten =