பிரமாண்ட கடற்படை கப்பலை பார்வையிட்ட இளவரசி

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்ட எச்.எம்.எஸ். கடற்படைக் கப்பல், ஆசிய கண்டத்தை நோக்கி சனிக்கிழமை புறப்பட்டு சென்றது. இந்தக் கப்பலின் மேல்தளத்தில் 8 போர்விமானங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 6 கடற்படை கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல், கடற்படைக்கு சொந்தமான 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் புடைசூழ இந்த பிரமாண்ட கப்பல் புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக இந்தக் கப்பலை இளவரசி இரண்டாம் எலிசெபத் பார்வையிட்டார். இதையொட்டி, ஹெலிகாப்டரில் கப்பலின் மேல்தளத்தை அவர் வந்தடைந்தார். கப்பலின் கேப்டன் ஆங்கஷ் எஷன்சிங், தளபதி ஸ்டீபன் மூர்ஹவுஸ் ஆகியோர் இளவரசிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட இளவரசி, கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு, கடற்படையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, இந்தக் கப்பலை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

four × one =