குவாரண்டைன் ஹோட்டல்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை

இந்தியா உள்ளிட்ட சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகள், குவாரண்டைன் ஹோட்டல்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டு 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அந்த ஹோட்டல்களுக்கு ஜி.4.எஸ். என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு அந்த பாதுகாவலர்கள் பாலியல் தொல்லை அளிப்பது தெரியவந்துள்ளது.

துபாயிலிருந்து பிரிட்டன் வந்த மேரி சிட்வெல் என்ற 28 வயது இளம்பெண், இந்த திடுக்கிடும் தகவலை செல்போன் வாயிலாக பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்தார். இதேபோல், மேலும் 3 பெண்கள் தாங்களும் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

4 × two =