கரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரேசில் அதிபர்

பொதுமக்கள் போராட்டம்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கரோனா உயிர்பலியில் 4,60,000 பேருடன் பிரேசில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதேபோல், 1 கோடியே 60 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், சர்வதேச அளவில் பிரேசில் 3ஆம் இடம் வகிக்கிறது. நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ தவறிவிட்டதாகக் கூறி, தலைநகர் பிரசில்லாவில் உள்ள பாராளுமன்றம் முன்பாக பொதுமக்கள் சனிக்கிழமை திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட பிற நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. பிரேசிலில் கரோனாவை முறையாக கையாள தவறியதால், அதிபரின் புகழ் சர்வதேச அளவில் மங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

fourteen + eighteen =