லண்டனில் கிளேமராக பிறந்த நாள் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா

மிழில் கடந்த 2002ஆம் ஆண்டில் இளைய தளபதி விஜயுடன் தமிழன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இன்றைக்கு இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் இவர், ஹாலிவுட் திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா கடந்த 2018ஆம் ஆண்டில் தன்னை விட 10 வயது குறைவான ஹாலிவுட் திரைப்பட பின்னணி பாடகர் நிக் ஜோனசை காதலித்து கரம்பிடித்தார். தற்போது, பிரியங்கா சோப்ரா தன்னுடைய 39ஆவது பிறந்த நாளை லண்டனில், படுகிளேமராக கொண்டாடிய காட்சிகள் இணையத்தை அதிரவைக்கின்றன.

இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தில் நீச்சல் குளத்தில், சிவப்பு மோனோகினி உடையில், படுகிளேமராக காட்சியளிக்கிறார். இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல், மற்றொரு படத்தில் தனது செல்லபிராணியான வளர்ப்பு நாயை அரவணைத்துக் கொண்டும், இயற்கை எழில்மிகுந்த நீச்சல்குளத்தில் வெட்டாந்தரையில் படுத்துக் கொண்டும் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா, குறிப்பாக தன்னுடைய பிறந்த நாளன்று தன் அருகே இல்லாவிட்டாலும், தனது நலன் கருதும் தன் கணவர் நிக் ஜோனசுக்கு, இந்த நாளை சிறப்பான நாளாக மாற்றிக் காட்டியதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமன்றி கேவனா ஜேம்ஸ், திவ்ய ஜோதி, தியா போவென் ஆகியோரது பெயரை குறிப்பிட்டும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ரஸ்சோ பிரதர்ஸின் சிட்டாடல் படப்பிடிப்புக்காக லண்டனில் முகாமிட்டிருக்கிறார். இந்த வேளையில், தனது 39ஆவது பிறந்த நாளை அவர் லண்டனில் கொண்டாடியிருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் தயாரான தி வைட் டைகர் என்னும் படம் நெட்”ஃ”பிளிக்சில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × three =