போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இளவரசி ஆநி கணவருடன் அஞ்சலி

 

முதல் உலகப் போர் யுக்தியின் போது உயிர் தியாகம் செய்த ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து போர் வீரர்களுக்கான நினைவு சின்னத்தில் இளவரசி ஆநி தனது கணவருடன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

முதல் உலகப் போரின்போது துருக்கியில் கல்லிப்பொலி என்ற பகுதியில் 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 1916ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வரை நடைபெற்ற போர் நடவடிக்கை கல்லிப்பொலி போர்த் தொடர் என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
கான்ஸ்டான்டிநோபிள் நகரை கைப்பற்றி அதன் மூலம் ரஷ்யாவுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக பிரிட்டன் மற்றும் பிரெஞ்சுப் படைகள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையே கல்லிப்பொலி போர் யுக்தி என அழைக்கப்படுகிறது. எனினும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கூட்டு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து ராணுவ வீரர்கள் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

அவர்களின் நினைவாக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் ஆபி பகுதியில், நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. கல்லிப்பொலி போர் நடவடிக்கையின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இளவரசர் பிலிப் மறைவால், இங்கிலாந்து அரச குடும்பம் துக்கம் அனுசரித்து வரும் நிலையில், அக்குடும்பத்தின் சார்பில் இளவரசி ஆநியும், அவரது கணவர் துணை அட்மிரல் டிம் லாரன்சும் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுக் குறிப்பில் இளவரசர் டிம் லாரன்ஸ் எழுதியது:
இந்த ஆன்ஸக் நாளில், ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து படைவீரர்களையும், பெண்களையும் நினைவுகூரும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூஸிலாந்து பிரஜைகளுடன் நானும், கேத்தரினும் இணைந்து கொள்கிறோம். ராணுவ வீரர்களின் தியாகத்தை மட்டுமன்றி, அவர்களது துணிச்சல், கடமை உணர்வு, வெல்ல முடியாத மனநிலை ஆகியவற்றை பிரதிபலிப்பதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம் என அதில் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

two × five =