அலுவல் பணியை தொடங்கினார் இளவரசி

 

தனது கணவரும், இளவரசருமான 99 வயது பிலிப்பின் மறைவுக்கு பிறகு இளவரசி இரண்டாம் எலிசபெத், செவ்வாய்க்கிழமை தனது அதிகாரபூர்வ அலுவல் பணியைத் தொடங்கினார். இளவரசர் மரணத்தை தொடர்ந்து இருவார காலம் அனுசரிக்கப்பட்டுவந்த துக்கம், வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, வின்ட்ஸர் கேஸ்டிலில் இருந்தவாறு பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்த லாட்வியா நாட்டு தூதர் இவிதா மற்றும் இவோரி கோஸ்ட் நாட்டு தூதர் சாரா ஆபோக் அமானியுடன் காணொலியில் உரையாடி, தனது அலுவல்பூர்வ பணியை இளவரசி தொடங்கியிருக்கிறார்.
ஏற்கெனவே இருமுறை அலுவல்பூர்வ நிகழ்ச்சிகளில் இளவரசி பங்கேற்ற போதிலும், அதற்கான புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. மேலும், தனது 73 ஆண்டுகால காதல் கணவர் மறைந்து 12 நாள்களில் இளவரசி தனது 95ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அதற்கான புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில், தற்போது இளவரசி தனது அதிகாரபூர்வ பணியைத் தொடங்கியதற்கான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Add your comment

Your email address will not be published.

2 + 14 =