தந்தையர் தினத்தையொட்டி மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்த இளவரசர்

தந்தையர் தினத்தை முன்னிட்டு கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம், நார்ஃபோல்க் நகரில் உள்ள க்யூன் சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் 5 கிமீ தூர மினி மாரத்தான் போட்டியை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். இதில், 1300 பேர் பங்கேற்று ஓடினர். இந்நிகழ்வில், இளவரசின் 7 வயது மகன் ஜார்ஜும், 6 வயது மகள் சர்லோட்டியும் பங்கேற்றனர். முன்னதாக, இந்த நிகழ்வை உள்ளூர் பிரமுகர்தான் தொடங்கிவைப்பதாக இருந்தது. இந்நிலையில், திடீரென வில்லியம் அங்கு வந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

Add your comment

Your email address will not be published.

fourteen + eight =